Thursday, May 14, 2026

போரும் புழுதி நிலமும் (27)

 

சிறுகதை.

 போரும் புழுதி நிலமும்

 பாலைவனத் தரைப் பகுதி வெறிச்சோடிக் கிடந்தது. ஆள் நடமாட்டம் மிக அரிதாய்க் கிடைக்கின்ற புழுதி நிலம். ஆங்காங்கே வரண்ட புற்தாவரங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் காட்சியளித்தன. எப்போதாவது ஒரு ஆட்டிடையனைக் காணலாம்.

 சுமார் நானூறு அடி உயரத்தில் ஹெலிகொப்டர் ரக இராணுவ விமானமொன்று தான் சுமந்து வந்த சிறப்புப் பயிற்சி பெற்ற ஐந்து இராணுவக் கொமாண்டோக்களைத் தரையிறக்குவதற்கான சந்தர்ப்பம் பார்த்து மேலே வட்டமிட்டுக் கொண்டிருந்தது.

 அந்த விமானத்தைச் செலுத்தி வந்த விமானி ஏற்கனவே உலக நாடுகளுக்கிடையே நடந்த பல   போர்களில் இவ்வாறு தரைப் படையினரை தரையிறக்குவதில் மிகவும் அனுபவம் வாய்ந்த ஒருவர். ஏற்கனவே நடைபெற்ற போர்களில் அவர் புரிந்த சாதனைகளைப் பாராட்டி அந்த நாட்டு ஜனாதிபதியினால் தங்கப் பதக்கம் மற்றும் பாராட்டுப் பத்திரங்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்ட  ஒரு உயர் இராணுவ அதிகாரி.

 விமானம் நிலத்திலிருந்து சுமார் இருநூறு அடி வரை மெதுவாக மெதுவாக் கீழே இறங்கிக் கொண்டிருந்தது. ஐந்து இராணுவக் கொமாண்டோக்களும் தங்களது பயணப் பொதிகளையும் இயந்திரத் துப்பாக்கிகளையும் முதுகில் சுமந்து கொண்டு பரசூட்டில் கீழே இறங்குவதற்காக ஆயத்தமானார்கள்.

 நிலைமைகளை மிக உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டு இராணுவ கொமாண்டோக்களை தரையில் இறக்குவதற்கான சரியான இடத்தையும் அந்த இடம் எந்தவொரு பாதுகாப்புமற்ற இடம் இல்லை என்பதையும் உறுதிப்படுத்திக் கொண்டு விமானத்தைச் சிறிது வேகமாகக் கீழ் நோக்கிச் செலுத்திய வேளை,

 எங்கிருந்தோ வேகமாகச் சீறிப் பாய்ந்து கொண்டு விமானத்தை நோக்கி வந்த ஏவுகணையொன்று விமானத்தின் இடதுபக்க இறக்கையுடன் இணைந்த கதவின் ஒரு பகுதியை உடைத்துக் கொண்டு பாரிய சத்தத்துடன் நிலத்தில் விழுந்து சுக்கு நூறாகியது.

 விமானம் நிலை தடுமாறி சிறகுடைந்த தும்பிபோல் வட்டமிட்டது. வலது பக்க கதவின் ஓரத்தில் அமர்ந்திருந்த இரு கொமாண்டோக்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் தங்களது பரசூட்கள் மூலம் வெளியே பாய்ந்தனர். ஏனைய மூன்று கொமாண்டோக்களையும் விமானியையும் சுமந்து கொண்டு திசைமாறிய பறவையாய் அடர்ந்த மலைகளுக்கிடையே அந்த விமானம் மறைந்து மாயமானது. அந்த விமானத்திற்கும் அதிலிருந்த ஏனைய நால்வருக்கும் என்ன நடந்தது என்பது இதுவரை தெரியவில்லை.

 ஓரளவு பலத்த காற்றும் புழுதியும் பரசூட்டில் பாய்ந்த இரு கொமாண்டோக்களையும் மிகவும் சிரமத்தின் மத்தியில் கீழே கொண்டு வந்து சேர்த்தது. எந்தவித ஆபத்துகளும் இல்லாது நிலத்தில் கால்பதித்த இருவரும் சுற்றுமுற்றும் நோட்டமிட்டனர். கண்ணுக்கெட்டிய தூரத்தில் மனித நடமாட்டமோ குடியிருப்புகள் இருப்பதற்கான அறிகுறிகளோ எதுவுமே தென்படவில்லை. கடந்த சில நாட்களாக  இந்த நாட்டின் எல்லைப் புறத்தில் தரையிறக்கப்பட்ட தங்களது நாட்டைச் சேர்ந்த ஏனைய படையினருடன் எவ்வாறு சேர்ந்து கொள்வதெனத் தெரியாது தடுமாறினர். சிறிது நேரம் இருவரும் உரையாடிவிட்டு தரையில் அமர்ந்தனர்.

கொமாண்டோ வில்லியம் ஜூனியர் தன் பயணப்பொதியில் கைவிட்டு அதி நவீன தொலைத்தொடர்பு சாதனம் ஒன்றை எடுத்து தன் உயர் அதிகாரிகளுடன் தொடர்பை ஏற்படுத்த முயற்சித்தான். பலமுறை முயற்சித்தும் முடியவில்லை. என்ன செய்வதெனப் புரியாது தடுமாறிய வேளை,

 மற்றைய கொமாண்டோ நிக்கலஸ் றைட், 'நாம இங்க நிற்பது அவ்வளவு பாதுகாப்பு இல்லை. இந்த நாட்டுல கூலிப் படைகள் ஏராளம். அரச படைகளிடம் மாட்டினாலும் பரவாயில்லை. ஆனா இந்த கூலிப் படைகளுக்கிட்ட மாட்டிக்கிட்டா ரொம்ம சிக்கல். நம்மள சாகடிச்சிடுவாங்க. இப்பவே இருட்டாயிடுச்சு. எதற்கும் இந்த திசைகாட்டியைப் பாரு. அதில நாம இருக்கிற லொக்கேஷனும் நல்லாத் தெரியும். அத்தோட நம்மட ஆட்கள் இருக்கிற லொக்கேஷனும்; தெரியும்' எனக் கூறினான்.

 நிக்கலஸ் றைட் இடமிருந்து நவீன திசைகாட்டியைப் பெற்றுக் கொண்ட வில்லியம் தாங்கள் நிற்கும் திசைக்கு எதிரே சுமார் பத்து கிலோ மீட்டர்களுக்கு அப்பால் தங்களது நாட்டுப் படையினர் முகாமிட்டுள்ள இடம் காட்டப்படுவதை அறிந்து மகிழ்ச்சியடைந்தான்.

 'நிக்கலஸ். நாம இருக்கிற இடத்திலிருந்து சுமார் பத்து கிலோ மீட்டர் தூரத்திலே நம்மட ஆட்கள் இருக்கிறாங்க. எப்படியோ அவர்களைத் தொடர்பு கொண்டால் அவர்களுடன் சேர்ந்து கொள்ளலாம்.' என வில்லியம் கூறினான்.

 'தட்ஸ் றைட். இரவோடு இரவா அந்த இடத்தை அடைந்து விட்டால் தப்பிக்கலாம். எதற்கும் அந்த திசையை நோக்கி நடப்போம்' எனக் கூறியவாறு தனது தோற்பையிலிருந்து சிறிய பிஸ்கட் பக்கட் ஒன்றை எடுத்து உடைத்து வில்லியம் இடம் நீட்டினான், நிக்கலஸ்.

 பிஸ்கட் பக்கட்டிலிருந்து இரண்டு பிஸ்கட்களை எடுத்துக் கொண்ட வில்லியம் 'தங்ஸ்' எனக் கூறிவிட்டு தனது பையிலிருந்த தண்ணீர் போத்தல் ஒன்றை எடுத்து 'றை இட்' எனக் கூறியவாறு நிக்கலஸை நோக்கி நீட்டினான்.

 எவ்வாறான சூழ்நிலையிலும் தங்களைக் காப்பாற்றிக் கொள்ளவும் இடத்திற்குத் தகுந்தவாறு உணவுகளை உட்கொள்ளவும் பழக்கப்பட்டுப் போன இவர்கள் தங்களது மனைவி மக்கள் குடும்பத்தினர் அனைவரையும் பிரிந்து வந்து தங்களது நாட்டுக்காக நாடு விட்டு நாடு சென்று பணி புரிவதென்பது ஒருவகை தியாகம்தான்.

 மாற்றான் படையினரிடம் மாட்டிக் கொள்வதற்குள் எப்படியோ தங்களது நாட்டுப் படையினருடன் இணைந்து விடவேண்டுமென்ற எண்ணத்துடன் இருவரும் சிறிது இடைவெளி விட்டு நடக்க ஆரம்பித்தனர். இது போன்ற எத்தனையோ பாலவனங்களில் நடந்து பயிற்றப்பட்ட இவர்களுக்கு இது ஒன்றும் புதிதல்ல.

 பின்னால் நடந்து வந்து கொண்டிருந்த நிக்கலஸ் திடீரென கேட்ட பலத்த வெடிச்சத்தத்தினால் தன்னைச் சுதாகரித்துக் கொண்டு தனது இயந்திரத் துப்பாக்கியை இயக்க முற்பட்டான்.

 அதே வேளை முன்னால் சென்று கொண்டிருந்த வில்லியம் கால்கள் இரண்டும் சிதற முன்நோக்கி வீசப்பட்டு சுமார் ஐம்பது மீற்றருக்கு அப்பால் இரத்த வெள்ளத்தில் கிடந்தான்.

 அப்போதுதான் நிக்கலஸுக்குத் தெரிந்தது நடந்து செல்லும் பாதையில் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டுள்ளன என்பது.

 வில்லியம் சிதறிக் கிடக்கும் இடத்தை நெருங்க வேகமாகத் தன் கால்களை நகர்த்திய நிக்கலஸ் தனது இடது காலைத் தூக்காது அப்படியே நின்றான். தனது காலைத் தூக்கினால் தானும் சிதறிவிடுவேன் என எண்ணி முதன் முதலாக மரண பயத்தை உணர்ந்தான்.

 பல மணி நேரம் அப்படியே அசையாது நின்று கொண்டிருந்த நிக்கலஸின் கண் முன்னே வீட்டிலிருந்து வரும்போது தன் அன்பு மனைவி இரு பிள்ளைகளிடம் விடைபெற்றுக்கொண்டு வந்த காட்சி தோன்றி அவனைக் கொல்லாமல் கொன்றது. என்னதான் மனவுறுதி கொண்ட வீரனாக இருந்தாலும் தன் மனைவி மக்களின் எண்ணம் வரும் போது நிலைகுலைந்து விடுவது இயற்கைதான்.

 

ஜூலி அவனது காதல் மனைவி. முப்பது வயதான ஜூலியை தான் பல்கலைக் கழகத்தில் படிக்கும் போதே காதலித்துத் திருமணம் செய்து கொண்டான். ஐந்து வயதில் ஒரு ஆணும் மூன்று வயதில் ஒரு பெண்ணும் அவர்களது அன்புச் செல்வங்கள். ஜூலி ஒரு தனியார் நிறுவனத்தில் நல்ல சம்பளத்துடன் பணிபுரிகிறாள். எல்லா வசதிகளும் கொண்ட வாடகை வீடு. மகனை இந்த வருடம் தான் பாடசாலையில் சேர்த்துள்ளார்கள்.

 நிக்கலஸின் பெற்றோர் பிரான்ஸைச் சேர்ந்தவர்கள். ஜூலியின் பெற்றோர் நெதர்லாந்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் தொழில் நிமிர்த்தம் லொஸ் ஏஞ்சலில் குடியேறியவர்கள். நிக்கலஸ் மற்றும் ஜூலி இருவருக்கும் சகோதரர்கள் இல்லை.

 நிக்கலஸ் இராணுவத்தில் சேர்வது அவனது பெற்றோருக்கு விருப்பமாக இருக்கவில்லை. நிக்கலஸின் பிடிவாதம்தான் இராணுவத்தில் சேர்த்துவிட்டது. பல்கலைக் கழகத்தில் பொருளாதாரத்தில் சிறப்புப் பட்டம் பெற்ற முப்பத்து மூன்றே வயதான நிக்கலஸ் இராணுவத்தில் சேர்ந்து மிகக் குறுகிய காலத்திற்குள் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரியும் படையுடன் சேர்ந்து கொண்டான்.

 இறந்துபோன தன் நண்பனை நெருங்க முடியாமல் தன்னந்தனியே கால்கள் கடுக்க நிலத்தில் வைத்த காலை எடுக்க முடியாமல் இரவு முழுக்க நித்திரை இன்றி வருந்திய நிக்கலஸ் அப்போதுதான் காலைப் பொழுது புலர்வதை உணர்ந்தான்.

 வியர்வை ஆறாக ஓடியது. முகம் வரண்டு பிசுபிசுப்பாக இருந்தது. தன்னைக் காப்பாற்ற சிறப்புப்படையினர் யாராவது வரமாட்டார்களா என எண்ணியவாறு தன் பார்வையைத் திருப்பிய நிக்கலஸ் தூரத்தில் ஒரு கிராமவாசி மொட்டைத் தலையுடன் வருவதைக் கண்டு ஆச்சரியப்பட்டான். தன் இரு கைகளையும் உயர்த்தி உதவுமாறு சைகை காட்டினான். இவனது சைகையைப் புரிந்து கொண்டு சிறிது தூரம் நெருங்கி வந்த அந்தக் கிராமவாசி நிக்கலஸின் தோளில் துப்பாக்கி தொங்குவதைக் கண்டதும் பதறி அடித்துக் கொண்டு திரும்பி ஓடிவிட்டான்.

 சில மணி நேரங்களின் பின் அவ்வழியே ஒரு ஆட்டிடையன் மூன்று நான்கு ஆடுகளைக் கயிற்றில் கட்டிக் கொண்டு கயிற்றைத் தன் இடது கையால் பிடித்தவாறு நடந்து வந்தான். முதலில் நிக்கலஸைக் கண்டது ஆட்டிடையன் தான்.

 விபரமறியாது நிக்கலஸை நெருங்கிய ஆட்டிடையன் சல்மான், நிக்கலஸின் தோளில் துப்பாக்கி இருப்பதைக் கண்டு முதலில் பயந்தான்.

 சந்தர்ப்பத்தை சாதகமாகப் பயன்படுத்த எண்ணிய நிக்கலஸ் சைகைகள் மூலம் நடந்தவற்றைக் கூறி அவனைக் காப்பாற்றுமாறு வேண்டினான்.

 நிலைமையைப் புரிந்து கொண்ட சல்மான் வெளிநாட்டுப் படையினரான இவர்கள் இங்கு எப்படி வந்தார்கள் என அறிய முயற்சித்து பல கேள்விகள் கேட்டான். நிக்கலஸ் கதைப்பது சல்மானுக்குப் புரியவில்லை. சல்மான் கதைப்பது நிக்கஸுக்குப் புரியவில்லை. இருந்தும் இதற்கு முன்பும் வெளிநாட்டுப் படையினர் கண்ணிவெடிகளில் சிக்கி இப் பகுதியில் மரணமானது சல்மானுக்குத் தெரியும். இவர்களுக்கு உதவப் போய் தான் மாட்டிக் கொண்டால் என்ன செய்வதென நினைத்த சல்மான் 'எல்லாம் அல்லாஹ்வின் நாட்டம்' என நம்பிக்கை கொண்டு தான் ஓட்டிவந்த ஆடுகளைக் கட்டி வந்த இரு நீளமான கயிறுகளை எடுத்து நிக்கலஸின் இடுப்பை வளைத்து இறுகக் கட்டினான்.

 தூர நின்று கயிற்றை வேகமாக இழுப்பதன் மூலம் தன்னை விடுவிக்கப் போகிறான் என்பதைப் புரிந்து கொண்ட நிக்கலஸ் அதற்கு ஈடுகொடுத்து கயிற்றை இழுக்கும் போது தன் பலம் கொண்டு எகிறிவிட வேண்டுமென நினைத்து தன் உடம்பின் மேற்பகுதியில் சிலுவைச் சின்னத்தை தன் விரல்களால் இட்டுக் கொண்டான்.

 சல்மான் வாட்டசாட்டமான துணிகர இளைஞன். ஆடு மேய்ப்பதுதான் அவனது தொழில். அவன் தன் பெற்றோருடன் வசிப்பது சிறிது தூரத்தில் தெரியும் மலையடிவாரத்தில்தான்.

 இடுப்பில் கட்டிய கயிற்றை மீண்டுமொரு முறை சரிபார்த்த சல்மான் நிக்கலஸின் தோளில் தொங்கிய துப்பாக்கியைக் கீழே போட்டுவிடுமாறு கூறிவிட்டு வாய்க்குள் ஏதோ முணு முணுத்தவாறு சடுதியாக கயிற்றை இழுத்தான். அதற்கேற்றால் போல் அதி வேகமாகச் செயற்பட்ட நிக்கலஸ் எகிறி வெளியே குதித்தான்.

 

நிக்கலஸ் எதிர்பார்த்தது போல் எதுவும் நடக்கவில்லை. நிக்கலஸ் ஓடி வந்து சல்மானைக் கட்டியணைத்து முத்தமிட்டான். எந்தவித முரண்பாடுகளுமற்ற இரு மனித ஜீவன்களின் உணர்வுகள் மட்டுமே அங்கு தென்பட்டன.

 சல்மான் நிக்கலஸ் கால் வைத்திருந்த இடத்தை நெருங்கி நன்றாக உற்றுப் பார்த்தான். அது கண்ணிவெடியல்ல. ஒரு சிறிய இறப்பர் பொம்மை. அதைக் கையில் எடுத்து நிக்கலஸிடம் கொடுத்தான். அது நிக்கலஸின் பிள்ளைகள் விளையாடும் பொம்மையை ஒத்ததாக இருந்தது. அதை தனது தோற்பையில் பத்திரப்படுத்திக் கொண்ட நிக்கலஸ் மீண்டும் சல்மானைக் கட்டியணைத்து தனது கழுத்தில் போட்டிருந்த இயேசு நாதரின் உருவத்துடன் கூடிய தங்கச் சங்கிலியை சல்மானின் கழுத்தில் மாட்டிவிட்டான். இன, மத, நிற, தேச வெறி என்பவற்றுக்கெல்லாம் அப்பால் மனித நேயம் மகத்தானது.

 சிறிது நேரத்தில் நிக்கலஸின் பையிலிருந்த தொலைத் தொடர்பு சாதனம் அலறியது. வேக வேகமாக கையிலெடுத்து உரையாடிக் கொண்டிருக்கும் போது மேலே விமானமொன்று தாழப் பறந்து நீளமான ஏணியொன்றை கீழே இறக்கியது. துரிதமாகச் செயற்பட்ட நிக்கலஸ், சல்மானின் கைகளைப் பற்றிக் கொண்டு தன் நன்றியைப் பகிர்ந்த வண்ணம் ஏணியில் தாவியது தான் தாமதம் விமானம் உயரப் பறந்து வெகுதூரம் சென்று மறைந்துவிட்டது.

 ஆச்சரியத்துடன் விமானம் சென்ற திசையையே பார்த்துக் கொண்டிருந்த சல்மான் தன் ஆடுகளை நோக்கி இரண்டடி கூட வைத்திருக்கமாட்டான், எங்கிருந்தோ வந்த மூன்று நான்கு துப்பாக்கி ரவைகள் அவனது இதயத்தைக் கடந்து புழுதி நிலத்தில் சிதறிக் கிடந்தன.

 சல்மான் சரிந்து கீழே விழுந்தான்.

 அன்றிரவு முழுவதும் மேற்குலகத் தொலைக்காட்சிகள் 'முற்றுகையின் போது பயங்கரவாதக் கூலிப்படையினரால் கைது செய்யப்பட்டு பணயக் கைதியாக வைக்கப்பட்டிருந்த கொமாண்டோ நிக்கலஸ் றைட் என்னும் சிறப்புப் படை வீரர் அரச படையின் அதிரடி செயற்பாட்டால் மீட்கப்பட்டு நாட்டுக்குக் கொண்டுவரப்பட்டார்' என்ற செய்தி ஒளிபரப்பப்பட்டது.

 அதேவேளை, அன்றிரவு முழுவதும் உள்நாட்டுத் தொலைக்காட்சிகள் 'மேற்குலக நாடுகளின் உளவாளியாகச் செயற்பட்ட சல்மான் என்ற தேசத்துரோகி கையும் மெய்யுமாகப் பிடிபட்டபோது தப்பிக்க முயன்றதால் சுட்டுக் கொல்லப்பட்டான்' என்ற செய்தி ஒளிபரப்பப்பட்டது.

 - எஸ். ஏ. கப்பார் (இலங்கை)

 (இச் சிறுகதை தமிழ்நெஞ்சம் மே 2026 மாத இதழில் பிரசுரமானது. பிரதம ஆசிரியர் தமிழ்நெஞ்சம் அமின் மொகமட் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.)

நோன்பின் மாண்பு (26)

 

சிறுகதை.

 நோன்பின் மாண்பு

 அமீனுல்லா வீட்டை விட்டு வெளியேறி ன்றுடன் ஒரு மாதமாகிவிட்டது.

 அமினா அமீனுல்லாவின் மனைவி. ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவள். அவளது தந்தை ஓர் கூலித்தொழிலாளி. தினமும் கூலி வேலைக்குச் சென்று அதன் மூலம் கிடைக்கும் சொர்ப்ப வருமானத்தில் தன் குடும்பத்தை ஓட்டி வந்தார். அமினாவின் உம்மா வீட்டில் டியப்பம் செய்து உறவினர்களுக்கும் அயலவர்களுக்கும் விற்று வந்தார். அப்போது அமினாவுக்கு 13 வயது. பாடசாலை செல்லும் நேரங்கள் தவிர ஏனைய நாட்களில் உம்மாவுக்குத் துணையாக ருந்து வீட்டு வேலைகள் அனைத்தையும் செய்து வந்தாள். படிப்பில் நல்ல கெட்டிக்காரி. எப்படியோ கஷ்டப்பட்டு உயர்தரம் வரை படித்தவளுக்குப் பல்கலைக்கழகம் செல்ல வாய்ப்புக் கிட்டவில்லை. வீட்டின் நிலைமை காரணமாக தொடர்ந்து படிக்க விரும்பாத அமினா ஒரு தனியார் கம்பனியில் வேலைக்குச் சேர விரும்பி தன் உம்மாவின் அனுமதி வேண்டி நின்றாள்.

 'என்ன மவ சொல்றீங்க. நானும் உங்க வாப்பாவும் த்தன நாளும் கஷ்டப்பட்டது துக்குத்தானா? நீங்க படிச்சு ஒரு டீச்சர் வேலையாவது பார்ப்பீங்க என்றுதானே நெனச்சம். தனியார் கம்பனில வேலை செய்றதல்லாம் மிச்சம் கஷ்டம் என்று சொல்றாங்க. அதுவும் பொம்புள புள்ளகள தனியார் கம்பனிக்கு வேலைக்கு அனுப்பக் கூடாதென்று சொல்றாங்க' என கவலைப்பட்டார் அமினாவின் உம்மா.

 'அப்படி எல்லாம் ல்ல உம்மா. எங்க போனாலும் நாம மானம் மரியாதையோட ருந்தா சரிதான் உம்மா. நமக்குத் தாற வேலைய நாம செய்து போட்டு நேரத்துக்கு வீட்டுக்கு வந்தா சரிதானே உம்மா' என தனது முடிவை நியாயப்படுத்தினாள் அமினா.

 'என்னவோ நான் உலகம் தெரியாதவ. என்னவெண்டாலும் உங்க வாப்பா வந்ததும் கேட்டுப் பாரு' எனக் கூறியவாறு நகர்ந்து சென்றார், அமினாவின் உம்மா.

வ்வளவு காலமும் எத்தனையோ சிரமங்களையும் தியாகங்களையும் மேற்கொண்டு தன்னை உயர்தரம் வரை கற்பித்த தன் பெற்றோரை மேலும் மேலும் சிரமப்படுத்தக் கூடாது என்ற எண்ணத்தை தனது தந்தையிடம் எவ்வாறு தெரியப்படுத்துவது என அறியாது வருந்தினாள் அமினா. எதுவாகிலும் ஒரு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு வாப்பா வந்ததும் எப்படியாது ணங்க வைத்து அடுத்த வாரம் முதல் வேலைக்குச் செல்ல வேண்டுமென முடிவெடுத்தாள் அமினா.

 அன்று மாலை நேரம் வேலைகளை முடித்துவிட்டு வீடு வந்த வாப்பாவை அணுகி,

 'வாப்பா. எனக்கு தொடர்ந்து படிக்க விருப்பமில்லை வாப்பா. த்தோடு நிறுத்திக் கொண்டு ஏதாவது நல்ல வேலயில சேரலாம் என விரும்புறேன். நம்மட காசிம் மாமாட மகளும் அந்த கம்பனியில்தான் வேல செய்யிறா. நல்ல சம்பளமும் கொடுக்கிறாங்களாம். வேலையும் அவ்வளவு கஷ்டமில்லையாம். வேலைக்கு ன்னும் ஆட்கள் தேவையாம். அதுதான் நானும் போகலாம் என விரும்புறேன் வாப்பா. நீங்க ஆம் என்று சொன்னால் போறன். நம்மட கஷ்டங்களும் கொஞ்சம் கொஞ்சம் சரியாகிடும். உங்களுக்கும் வயசாகிப் போகுது. ன்னும் எத்தனை நாளைக்குத்தான் நீங்களும் உம்மாவும் ப்படி கஷ்டப்படுற. சரி என்று சொல்லுங்க வாப்பா' எனக் கெஞ்சி நின்றாள்.

மிக நீண்ட நேரம் யோசித்துக் கொண்டிருந்த அமினாவின் வாப்பா ஒரு பெரு மூச்சு விட்டவாறு,

 'நான் என்னம்மா சொல்ல ருக்கு. நீ விரும்பிக் கேட்ட எதைத்தான் ல்லண்டு சொல்லியிருக்கேன். நான் படிக்காதவன். உனக்குத்தான் நல்லது கெட்டது தெரியும். உங்க உம்மா விரும்பினா வேலைக்குப் போ. அவ்வளவுதான் நான் சொல்ல ,ருக்கு' எனக் கூறிவிட்டு எழுந்து சென்று தொழுகைக்குச் செல்ல ஆயத்தமானார்.

 அமினா சந்தோசமடைந்தாள். அடுத்த வாரம் முதல் வேலைக்குச் செல்ல ஆயத்தமானாள்.

 சுமார் ஐந்து வருடங்களின் பின் அமினாவுக்குத் திருமணம் முடித்து வைக்க மாப்பிள்ளை தேடும் படலம் ஆரம்பமானது. எப்படியாவது ஓர் அரச தொழில் புரியும் ஒருவரைத் தேடி அலைந்தார்கள். முடியவில்லை. றுதியில் அமினாவின் தூரத்து உறவுக்காரர் மூலம் வெளிநாடு சென்று திரும்பி வந்து சொந்தமாக ஆட்டோ வைத்துத் தொழில் புரியும் அமீனுல்லா மாப்பிள்ளையாகக் கிடைத்தான். திருமணமும் நல்ல முறையில் எளிமையாக நடைபெற்றது. முதல் ஒரு வருடம் எந்தவொரு பிரச்சினையும் ,ல்லாமல் வாழ்க்கை ஓடியது. ஓர் அழகிய ஆண் குழந்தையும் கிடைத்தது.

நாட்கள் செல்லச் செல்ல அமீனுல்லாவின் மாத வருமானம் குறைந்து கொண்டே செல்ல தற்போதைய வாழ்க்கைச் செலவுக்கு ருவர் உழைத்தும் ஈடுகொடுக்க முடியாது தடுமாறினான். தன் நிமித்தம் டைக்கிடை ருவருக்கிடையேயும் மனத்தாபங்கள் ஏற்படத் தொடங்கின.

 ஒரு ஞாயிற்றுக்கிழமை மதியம் உணவருந்தும் போது பரிமாறிய உணவில் ஒரு தலை முடி கிடந்ததால் ஏற்கனவே அமினாவுடன் கோபத்தில் ருந்த அமீனுல்லா,

 'சீ... என்ன து. கண்ணை எங்க வைத்துக் கொண்டு சமைக்கிறது. வர வர கழுத தேஞ்சு கட்டெறும்பான கதையாப் போச்சு. நல்லாப் பாரு. கண்ணத் தொறந்து பாரு' என ஆத்திரப்பட்டு சாப்பாட்டுத் தட்டைத் தட்டி விடவும் அமினாவின் உம்மா உள்ளே வரவும் சரியாக ருந்தது.

 ண்டைக்கு லீவு நாள். நான் சமைக்கிறன் எண்டுதான் சொன்னேன். உம்மாதான் வழக்கம் போல சமைச்சாங்க. வயது போன காலத்துல தவறுதலா முடி விழுந்தத கவனிக்கல்ல போல. ந்த சின்ன விஷயத்துக்கு போய் ப்படி ஆட்டம் போட்டா எப்படி?' என்றாள் அமினா.

 மனைவிதான் சமைத்தாள் என நினைத்து ஆர்ப்பாட்டம் செய்த அமீனுல்லாவுக்கு தர்ம சங்கடமாகிவிட்டது. ஒருவாறு சமாளித்துக் கொண்டு மீண்டும் உணவுத் தட்டை அருகில் எடுத்து உணவருந்தி விட்டு ஆட்டோவை எடுத்துக் கொண்டு வெளியே சென்று விட்டான்.

 'உம்மா, கொஞ்சம் பார்த்து சமைக்கிறதுதானே. சாப்பாட்டில முடி கிடந்தது என்று கத்துறார். பாத்தாய் தானே' என்றாள் அமினா.

 ஒன்றுமே பேசாமல் நகர்ந்து விட்டார் அமினாவில் உம்மா. சில நாட்களாக மருமகனின் செயற்பாடு அவ்வளவு நல்லதாகத் தெரியவில்லை. ஆதலால் ஏதாவது கதைத்து பிரச்சினையைப் பெரிதாக்கிக் கொள்ள விரும்பவில்லை.

 நாட்கள் சில கடந்தன. ஒரு நாள் 'இஞ்ச பாருங்க. அடுத்த மாதம் நோன்பு ஆரம்பமாகுது. தலை நோன்புக்கு மாமி வீட்டுக்கு நோன்புச் சாமான்கள் அனுப்ப வேண்டும். உங்கட உம்மா வாப்பா தங்கச்சிக்கெல்லாம் உடுப்பும் எடுக்க வேண்டும். ப்படியே தொழில் ல்ல தொழில் ல்ல என்று வீட்டிலேயே ருந்தா எப்படி. என்ட சம்பளம் சாப்பாட்டுக்கு மட்டும்தான் போதும். மத்த வேலைகள் எல்லாத்துக்கும் நீங்கதான் ஒரு வழி பண்ண வேண்டும்.' என அமினா கூறிய வார்த்தைகள் அமீனுல்லாவின் மனதைப் புண்படுத்தின. தான் தொழில் செய்யாது வெட்டியாக வீட்டில் ருப்பதாகச் சுட்டிக்காட்டிக் கதைக்கிறாள் என எண்ணி வருந்தினான்.

பெற்றோல் விலையேற்றத்தின் பின் ஆட்டோ தொழிலில் சரியான வருமானம் கிடைக்காததையிட்டு கவலைப்பட்டான். வேறு தொழில் செய்யவும் தெரியவில்லை. தனது ஆட்டோவை விற்றுவிட்டு மனைவி மக்களைத் துறந்து மீண்டும் வெளிநாடு சென்று உழைத்தால் என்னவென யோசிக்கலானான். வெளிநாடு செல்லும் வரை தன் மனைவியைப் பிரிந்து தனது உம்மாவின் வீட்டில் தங்கியிருப்பதாக பிழையானதொரு முடிவெடுத்து உம்மாவின் வீட்டுக்குச் சென்றுவிட்டான் அமீனுல்லா.

 தன் கணவனின் செயலைச் சற்றும் எதிர்பாராத அமினா வேதனையடைந்தாள். தன் மாமியின் வீட்டுக்குப் பல தடவைகள் சென்று தன் கணவனை வீட்டுக்கு வருமாறு அழைத்தாள். ஆனால் அமீனுல்லாவின் பிடிவாதம் விட்டுக் கொடுக்க மறுத்தது. வீட்டுக்குச் செல்லும் போதெல்லாம் அமினாவின் மாமி நல்ல வார்த்தைகள் கூறி நம்பிக்கையூட்டி அனுப்பிவைப்பார். பிள்ளைகளின் செயல்களுக்குத் தாய்மார் என்ன செய்ய முடியும்.

 நாளை தலை நோன்பு. தலை நோன்புக்குரிய ஈச்சம் பழம், கோழி றைச்சி, அரிசி, தேயிலைத் தூள், சீனி, பால் மா, குளிர்பானம் போன்ற பொருட்களெல்லாம் வாங்கிக் கொண்டு தனது மகனையும் உம்மாவையும் அழைத்துக் கொண்டு மாமியின் வீட்டுக்குச் சென்றாள், அமினா. அவ்வேளை அமீனுல்லா வீட்டில் ருக்கவில்லை.

 பேரப்பிள்ளையைக் கண்ட சந்தோசத்தில் ஓடி வந்த அமினாவின் மாமனார் தன் பேரப்பிள்ளையைத் தூக்கி உச்சி முகர்ந்து ஆனந்தப்பட்டார்.

 'மவ, ஞ்ச வாங்க. யாரு வந்திரிக்காங்க என்று பாருங்க'

 வாப்பாவின் குரல் கேட்டு வெளியே வந்த அமினாவின் மதினி,

 'வாங்க மாமி. வாங்க மதினி. டேய் செல்லக் குட்டி. வாடா' என வாப்பாவின் கையிலிருந்த அமினாவின் மகனை பெற்றுக்கொண்டாள். தற்கிடையில் குசினியில் வேலை செய்து கொண்டிருந்த அமினாவின் மாமி வெளியே சத்தம் கேட்பது அறிந்து வெளியே வந்தார்.

 'சம்மந்தி, வாங்க வாங்க. அமினா வாப்பாவைக் கூட்டி வரல' என அன்போடு கேட்டார்.

 'ல்ல மாமி. வாப்பா என்னவோ அலுவலா வெளியே போயிட்டாங்க. பொறகு வருவாங்க. த உள்ளே கொண்டு வையுங்க' எனப் பதிலளித்தவாறு கொண்டு வந்த தலை நோன்புச் சாமான்களை மாமியின் கையில் கொடுத்தாள்.

 உள்ளே சென்று நாற்காலிகளில் அமர்ந்த அமினா சுற்று முற்றும் பார்ப்பதைப் புரிந்து கொண்ட அமினாவின் மாமி,

 'அமீனுல்லா ப்பதான் கடைப் பக்கம் போறான். நாளைக்கு தலை நோன்பு. மாமி வீட்டுக்கு தலை நோன்புச் சாமான் வாங்கி வர புள்ளட வாப்பா புறப்பட்ட போது, ல்ல நான் வாங்கி வாரன் என்று சொல்லிக் கொண்டிருந்தான்.'

தைக் கேட்ட அமினாவுக்கு புதியதொரு நம்பிக்கைக் கீற்று துளிர்விட்டதை அறிந்த அவளது தாய் மகிழ்வுற்றார்.

 மாமியார் வீட்டிலிருந்து புறப்படும் வரை அமீனுல்லா வீட்டுக்கு வரவில்லை.

 அமினா வெளிக்கிட்டு ஓர் அரை மணி நேரத்தில் வீடு வந்தான் அமீனுல்லா. அவனது மனைவி, மகன், மாமியார் சகிதம் வந்து நோன்புச் சாமான்கள் தந்துவிட்டுப் போவதாகக் கூறி அப்பொருட்களை உபயோகிக்க அவனது அனுமதி வேண்டி நின்றார், அமீனுல்லாவின் உம்மா.

 'உங்கட சம்மந்தி. உங்களுக்கு நோன்புச் சாமான் கொண்டு வந்திருக்கா. அத ஏன் எனக்கிட்ட சொல்லுறீங்க. நானும் சாமான் வாங்கி வந்திருக்கேன். நீங்களும் கொண்டு கொடுத்தாச் சரி' என்றான் அமீனுல்லா.

 'டேய், நடந்தது நடந்து போச்சு. நமக்கும் கொமர் புள்ள ஒண்டு ருக்கு. அவள்ள வாழ்க்கையும் நெனச்சுப் பாரு. நாளைக்கு அவளுக்கும் ஒரு மாப்பிள பாக்க வேணும். எல்லாத்தையும் போட்டுட்டு தலை நோன்பும் நல்ல நாளுமா ஒண்ட பொண்டாட்டி புள்ளயளோட போய் வாழப் பாரு.'

 'உம்மா நீங்களும் தங்கச்சியுமா மாமி வீட்டுக்குப் போய் நான் வாங்கி வந்த நோன்புச் சாமான்களை கொடுத்திட்டு கெதியா வாங்க. நான் நாளைக்கு நோன்பு புடிச்சிட்டு சுபஹு தொழ பள்ளிக்குப் போக வேணும். நேரத்தோடு தூங்கப் போறன்' கூறிவிட்டு நகர்ந்தான்.

'என்ன உம்மா. அவங்க ப்பதான் வந்திட்டு போறங்க. பின்னால நாம போறதா. விடுங்க நாளைக்குப் பாப்பம். உங்கட மகன் புதிசா நோன்பு புடிச்சு பள்ளிக்கு தொழப் போகப் போறாராம். அல்லாஹ்தான் நல்ல வழியக் காட்டட்டும்' என்றாள் அமீனுல்லாவின் தங்கை.

 அதிகாலை எழுந்து வீட்டிலுள்ளவர்களுடன் சேர்ந்து தானும் சஹர் செய்து தலை நோன்பு பிடித்து சுபஹ் தொழுகைக்காக பக்கத்திலுள்ள பெரிய பள்ளிவாயலை அடைந்தான் அமீனுல்லா. தொழுகை முடிந்ததும் விசேட மார்க்கப் பிரச்சாரம் (பயான்) ஊரில் பிரபலமான மௌலவி ஒருவரால் நிகழ்த்தப்பட்டது. பயான்களெல்லாம் நிகழ்த்தப்படும் போது அமர்ந்திருந்து கேட்கும் பழக்கம் ல்லாத அமீனுல்லா என்னவோ அன்று அமர்ந்திருந்து மௌலவியின் கணீர் என்ற குரலில் சொக்கிப் போனான்.

 பயான் சொற்பொழிவின் ஒரு கட்டத்தில் 'தன் உறவுகளைத் துண்டித்து வாழும் மனிதன் என்னைச் சேர்ந்தவன் அல்ல' என்ற அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் வசனத்தை மௌலவி உரக்கக் கூறிய போது ஒரு கணம் அதிர்ச்சியுற்றான் அமீனுல்லா.

 வீடு வந்து சேர்ந்த அமீனுல்லாவின் மனச்சாட்சி அவனை ருப்புக் கொள்ள விடாது தடுத்தது. ங்கிருந்து அங்கும் அங்கிருந்து ங்கும் கால்கள் நடை பயின்றன.

 திடீரென தன் தங்கையை அழைத்து,

'ஹைறுன், மகரிப் தொழுதுவிட்டு நோன்புச் சாமான்களை மதினி வீட்டுக்குக் கொண்டு போங்க. நானும் கூட வாரன். வாப்பாவிடமும் சொல்லு' எனக் கூறிவிட்டு உள்ளே சென்றான்.

ஒரு நோன்பு, ஒரு சுபஹூத் தொழுகை, ஒரு பயான் ஒரு மனிதனில் ஏற்படுத்திய மாற்றத்தைக் கண்டு வியந்தவளாக 'எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. அல்ஹம்துலில்லாஹ்' எனக் கூறியவாறு ஆனந்தப்பட்டாள் அமினாவின் மதினி ஹைருன்.

 (முற்றும்)

தமிழ்நெஞ்சம் மார்ச் 2026 நோன்புப் பெருநாள் சிறப்பிதழில் பிரசுரமானது. பிரதம ஆசிரியர் தமிழ்நெஞ்சம் அமின் அவர்களுக்கும் தொகுப்பாளர் பாவேந்தல் பாலமுனை பாறூக் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

Monday, January 5, 2026

கம்பளை நோக்கிய பயணம்.

 25. கம்பளை நோக்கிய பயணம்.

இன்னும் இரு வாரங்களில் பல்கலைக்கழக இறுதிப் பரீட்சைகள் ஆரம்பமாக உள்ளன. கடந்த நான்கு வருடங்களாக தன் பட்டப் படிப்பை முடிப்பதற்காக தான் பட்ட கஷ்டங்களையும் அலைச்சல்களையும் தன் பெற்றோரின் தியாகங்களையும் மீட்டிப்பார்த்த அமினாவுக்கு ஆச்சரியமாக இருந்தது.

கண்டி மாவட்டம், கம்பளையைச் சேர்ந்த அமினா குடும்பத்தில் மூத்த பெண் பிள்ளை. அவளுக்குப் பிறகு இரண்டு ஆண் பிள்ளைகள். அமினாவின் வாப்பா மரக்கறித் தோட்டம் செய்து அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் குடும்பத்தைச் சிரமமின்றி ஓட்டிவந்தார். உம்மா வீட்டோடு சிறியதொரு சில்லறைக் கடை நடாத்தி அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் பிள்ளைகளின் படிப்புச் செலவுகளைக் கவனித்து வந்தார்.

அமினாவுக்குப் பல்கலைக்கழக அனுமதி கிடைத்ததும் குடும்பமே குதூகலித்து மகிழ்ந்தது. ஆனாலும் உம்மாவுக்கு கிழக்குப் பகுதி என்றால் ஒருவித பயம். மகளுக்கு தென்கிழக்குப் பல்கலைக்கழகம் கிடைத்தது பயமாகவும் கவலையாகவும் இருந்தது. தமது பகுதியில் கிடைத்திருந்தால் பாதுகாப்பாகவும் சந்தோஷமாகவும் இருந்திருக்குமே என எண்ணினார்.

உம்மாவின் கவலையைப் புரிந்து கொண்ட அமினா “உம்மா, தென் கிழக்குப் பல்கலைக்கழகம் அம்பாரை மாவட்டம் ஒலுவில் பகுதியில்தான் இருக்கு. ஒலுவில் துறைமுகமும் பக்கத்திலேதான். ஒலுவில் முழுக்கிராமும் முஸ்லிம்கள் வாழும் கிராமம். அங்கு எவ்விதமான பிரச்சினைகளும் இல்லை. நாங்க கொஸ்டலில் தங்கியிருந்துதான் படிக்கப் போறம். முஸ்லிம், தமிழ், சிங்களப் பிள்ளைகள் எல்லாம் ஒன்றா தங்கியிருந்து படிப்பதாலே பிரச்சினை ஒன்றும் இல்லை உம்மா. என்றாள். - நான்கு வருடங்களுக்கு முன் உம்மாவிடம் கூறியது நினைவுக்கு வந்தது, அமினாவுக்கு.

“வாப்பா, நாளை எப்படியும் நாங்க நாலு பேரும் ஒலுவில் செல்லவேண்டும். ஜெஸா பஸ்ஸுக்கு புக் பண்ணிட்டாவாம். பஸ் காசு கொடுக்கணும். எனக்கும் செலவுக்கு காசு வேணும். என வாப்பாவிடம் கூறினாள், அமினா.

மகள், உங்கட சல்லி எல்லாம் எடுத்து வைச்சிருக்கேன், மவ. என்னவோ கிழக்குப் பகுதியில் வெள்ளம் சூறாவளி வரப்போவதாக மிஹ்றுன் மாமி சொன்னா. எதுக்கும் பாத்து அனுப்புங்க எண்டு சொன்னவ மவ. போன வாட்டியும் கெம்பஸுக்குள்ளே வெள்ளம் வந்து நீங்க எல்லாம் கஷ்டப்பட்டு வந்து சேந்தீங்க. அதில வெள்ளத்துல வுளுந்து மதரஸாப் பிள்ளைகள் மவுத்தான சேதியும் தெரியும் தானே. எதற்கும் நல்லா விசாரிச்சுப் போங்க மவ

“அங்க பிரச்சினை ஒன்னும் இல்ல உம்மா. மழைதான் கொஞ்சம் மிச்சம் என்று சொன்னாங்க. அப்படி ஏதும் பிரச்சினை என்றால் பாதுகாப்பாக எங்களை அனுப்பிவைப்பாங்க. நீங்க கவலப்படாதீங்க உம்மா.

அடுத்த நாள் காலை நண்பிகளுடன் பல்கலைக்கழகம் வந்தடைந்த அமினாவுக்கு சிறிது பயமாகத்தான் இருந்தது. அநேகமான வெளியூர்ப் பிள்ளைகள் சமுகமளிக்கவில்லை. பரீட்சைகளும் நடைபெறமாட்டாதுபோல் தெரிந்தது. அமினா நினைத்துபோலவே பரீட்சைகள் ஒத்திப்போடப்பட்டுள்ளதாகவும் மாணவர்களை விடுதிகளிலிருந்து பாதுகாப்பாக தங்கள் தங்கள் வீடுகளுக்குச் செல்லுமாறும் அறிவிக்கப்பட்டது. வெளியூர் பிள்ளைகளை அனுப்பி வைப்பதற்கான எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

பிற்பகல் இரண்டு மணியளவில் உம்மாவுக்கு அறிவித்துவிட்டு தன் நண்பிகளுடனும் இன்னும் சில மாணவர்களுடனும் தனியார் பஸ் ஒன்றில் ஊர் வந்து சேர ஆயத்தமானாள், அமினா. பல்கலைக்கழக நிருவாகத்தினால் பயணத்துக்கான எல்லா ஒழுங்குகளும் நல்ல முறையில் செய்து கொடுக்கப்பட்டன. ஒலுவிலிலிருந்து அம்பாரை, மஹியங்கனை, கண்டி வழியாக கம்பளை நோக்கி வெளிக்கிட்ட பஸ் எப்படியும் ஆறு ஏழு மணித்தியாலங்களில் கம்பளை நகரை வந்தடைந்துவிடும். பஸ் வெளிக்கிடத் தொடங்கியதிலிருந்து மழை பொழிய ஆரம்பித்தது. வானம் விம்மிப் புடைத்துக் காணப்பட்டது. பாதையில் மண் மேடுகள் சரிந்து கற்பாறைகள் பாதையை மறித்துக் காணப்படுகின்றன போன்ற செய்திகளும் பஸ்ஸின் உள்ளே பரவ ஆரம்பித்தன. கண்டி, கம்பளை பகுதிகளில் பலத்த மழை பெய்வதாகவும் பல வீதிகள் நீரில் மூழ்கிக் கிடப்பதாகவும் செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன.

பயணம் எந்தவித ஆபத்துகளும் இல்லாமல் கண்டி நகரை நெருங்கிக் கொண்டிருக்கையில் பாதுகாப்புப் படையினரால் இடையில் பஸ் நிறுத்தப்பட்டு கூடுதலான வெள்ளம் பரவுவதால் தொடர்ந்து பயணிக்க அனுமதிக்க முடியாது எனவும் அவர்களைப் பின் தொடர்ந்து வருமாறும் கூறி ஒரு பௌத்த விகாரையை நோக்கி அழைத்துச் சென்றனர். பஸ்ஸில் இருந்த எல்லோர் முகத்திலும் அச்சத்தின் ரேகைகள் படர ஆரம்பித்தன. பஸ்ஸிலிருந்து இறங்கி விகாரைக்குள் சென்றபோது அங்கு ஏற்கனவே சில குடும்பங்கள் பாதுகாப்புக் கருதிக்  கொண்டுவரப்பட்டிருந்தன. அமினாவுக்கும் அவளது நண்பிகளுக்கும் பயம் தொற்றிக் கொள்ள ஆரம்பித்தது.

சிறிது நேரத்தில் அங்கிருந்த புத்த பிக்கு ஒருவர் வந்து “நீங்க பயப்படாதீங்க. நிலைமை மோசமாக உள்ளது என்பது என்னவோ உண்மைதான். கண்டி, கம்பளை எல்லாம் பெரும் வெள்ளம். பலத்த காற்று அடிச்சிக்கிட்டிருக்கு. மண்சரிவும் ஏற்பட்டுள்ளது. மின்சாரம், போக்குவரத்து, தொலைத்தொடர்பு எல்லாம் பாதிக்கப்பட்டிருக்கு. எங்கட ஆட்கள் எல்லாம் இங்கேயே இருக்கட்டும். நான் பள்ளிவாசல் மௌலவிமாருக்கு அறிவிச்சிருக்கேன். உங்களை வந்து அழைச்சிட்டுப் போவாங்க. என ஆறுதல் வார்த்தைகள் கூறி, வந்தவர்களின் கவலையைப் போக்கினார். கூறி சில நிமிடங்களில் கண்டி பெரிய பள்ளிவாசல் நிருவாகிகள் சிலர் ஒரு வேனில் வந்து அமினாவையும் நண்பிகள் மூவரையும் அழைத்துச்சென்று ஒரு முஸ்லிம் வீட்டில் ஒப்படைத்தனர். பஸ் சாரதியும் நடத்துனரும் இன்னும் சில ஆண்  மாணவர்களும் விகாரையில் தங்குவதற்கான ஒழுங்குகள் செய்து கொடுக்கப்பட்டன. அந்த வீடு இரு மாடிகளைக் கொண்ட பெரிய வீடு. அங்கும் வீட்டுச் சொந்தக்காரர்களின் உறவுகளான இரண்டு மூன்று குடும்பங்கள் பாதுகாப்புக் கருதி தங்கியிருந்தனர்.

இடி, மின்னல், மழை ஓய்ந்தபாடில்லை. சோவென்ற இரைச்சலுடன் காற்றும் மிக வேகமாக வீசியது. “மவ. நீங்க இப்ப வீட்டுக்கு போவ ஏலா. ஒங்கட உம்மா, வாப்பாக்கு கோல் போட்டு சொல்லுங்க. என ஒரு தாய் கூறியபோது அமினா உடனடியாக தனது தாய்க்கு அழைப்புவிடுத்தாள். அவளது நல்ல காலம் தொடர்பு கிடைத்துவிட்டது.

“மவ. எங்க இருக்கயள். இங்க நிலமை மிக மோசமாக இருக்கு. வந்திடாதீங்க. சரியான தண்ணி வருது. மழையும் பெரிசா பெய்யுது. மண் சரிவும் இருக்காம். எனக் கூறிக்கொண்டிருக்கும் போது தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டது. பல முறை முயற்சித்தும் அமினாவினால் உம்மாவுடன் கதைக்க முடியவில்லை. அமினாவுக்கு அழுகை அழுகையாக வந்தது. அன்றிரவு முழுக்க பயத்தினாலும் உம்மா, வாப்பா, சகோதரர்கள் பற்றிய கவலையாலும் எவருக்கும் நித்திரை வரவில்லை. சிறுவர்களைத் தவிர எவரும் உறங்கவில்லை.

நள்ளிரவு இரண்டரை மூன்று மணியிருக்கும் “மவ, எழுந்திருங்க. முன்பக்கமெல்லாம் தண்ணி பெரிசா வர ஆரம்பிச்சி. நீர்த்தேக்கம் எல்லாம் தொறந்தாச்சாம். மகாவலி கங்கையும் பெருக்கெடுத்திட்டாம். மேல் மாடிக்குப் போய் பாதுகாப்பா இருப்போம். முதல்ல பொம்பிளைப் பிள்ளைகள் சின்னதுகள் எல்லாம் மேலே போங்க. என வீட்டிலிருந்த பெரியவர் கூறிவிட்டு வீட்டிலிருந்த ஆண் பிள்ளைகள் இருவரையும் அழைத்து கீழ்மாடியில் இருந்த முக்கிய சாமான்களை எல்லாம் மேல் மாடிக்கு ஏற்றத் தொடங்கினார்.  அமினாவும் நண்பிகளும் மேல் மாடிக்குச் சென்று ஒரு ஜன்னல் ஓரமாக அமர்ந்து கொண்டனர்.

மறுநாள் பொழுது புலர ஆரம்பித்தது. மழை ஓய்ந்தபாடில்லை. வெள்ளம் வீட்டின் தாள்வாரம் வரை மட்டுமே காணப்பட்டது. வல்ல அல்லாஹ்வின் கருணையால் தங்கியிருந்த வீட்டுக்கு எந்தவொரு பாதிப்புமில்லை.

அவசர அவசரமாக ஒரு குடையைக் கையிற் பிடித்துக் கொண்டு பெரியவர் வெளியே வந்தார். பிரதான வீதி எங்கும் சன நெரிசல். முச்சக்கர வண்டிகள் ஒன்றிரண்டைத் தவிர வாகனங்களைக் காணவில்லை. வெள்ளம் வடிந்தோடும் இடமெல்லாம் சேறும் சகதியுமாகக் காணப்பட்டன. பெரியவரைக் கண்டதும் அவரை நோக்கி வந்த முஸ்தபா ஆசிரியர் “எண்ட அல்லாவே! நம்மட பக்கம் மட்டும்தான் பாதிக்கப்படல்ல போல. பள்ளத்து காணி, கடை, வீடெல்லாம் சரியான மோசம். மிச்சம் மௌத்தும் போல. அரசாங்கம் அவசர கால நிலையை அறிவிச்சிருக்காங்க. கம்பளப் பக்கம்தான் பாதிப்பு அதிகம் போல. பல இடத்தில மலை சரிஞ்சிருக்காம். நான் கண்டிக்கு வந்து அம்பது வருஷமாகுது. இப்படி ஒரு மழையைக் கண்டதில்லை. கம்பளையில வீடுகள் எல்லாம் பத்து பதினைந்து அடி தண்ணி வந்து பெரும் சேதமாம்.என ஆச்சரியப்பட்டுக் கொண்டே நகர்ந்து சென்றார், முஸ்தபா ஆசிரியர்.

 வகமாக வீடு வந்த பெரியவர் “என்ட அல்லாஹ். நுவரெலிய, அக்குரண, கம்பளை எல்லாம் பெரும் சேதமாம். அரசாங்கம் நாடு பூரா அனர்த்த நிலை அறிவிச்சிருக்காம். மிச்சம் பேர் மௌத்தாம். றம்புக் எல என்ற கிராமம் மொத்தமா மண்ணுக்கே போயிடுச்சாம். எத்தனை பேர் மௌத்து என்று தெரியாதாம். ரெண்டு மாடிக்கு மேலே எல்லாம் தண்ணி வந்துச்சாம்.” எனக் கூறிவிட்டு முன்பாகக் கிடந்த கதிரையில் அமர்ந்து தலையைத் தடவிக் கொண்டிருந்தார்.

இதைக்கேட்ட அமினாவுக்குப் பொறி கலங்கியது. றம்புக் எல அவளது தோழி ஜெஸாவின் வீடு அமைந்துள்ள ரம்மியமான கிராமம். கண்டி மாவட்டத்தில் அக்குறண பிரதேச சபைக்குட்பட்ட அலவதுகொட அங்கும்புர பிரதான பாதையின் மத்தியில் காணப்படும் அழகிய பசுமையான கிராமம். அக் கிராமத்தைச் சூழ மலைகள் அமைந்திருப்பது அக்கிராமத்தை மேலும் அழகுபடுத்துகிறது. சுமார் அறுநூறு முஸ்லிம் குடும்பங்கள் வாழும் அழகிய இயற்கை எழில் கொஞ்சும் கிராமம். வீட்டிலிருந்து வரும்போது ஜெஸாவின் உம்மா வாப்பா சகோதரர்கள் எல்லாம் றம்புக் எலவில்தான் இருந்தார்கள் என நினைத்தபோது அமினாவுக்கு வயிற்றைக் கலக்கியது. ஒருவாறு சுதாகரித்துக் கொண்டு ஜெஸாவை அணுகி,

“ஜெஸா. நம்மட பகுதி பெரிசாப் பாதிச்சிருக்கு போல. அதிலும் உங்கட றம்புக் எலவில் மண் சேதம் அதிகம் போல. உடனே வீட்டுக்கு கோல் போட்டுக் கேளு எனப் பதட்டத்துடன் கூறினாள், அமினா.

ஜெஸா உம்மாவுடன் கதைப்பதற்குப் பல முறை முயற்சி செய்தும் பலனில்லாமல் போயிற்று. அமினாவும் தனது வீட்டுக்கும் பல தடவை கோல் பண்ணிப் பார்த்தாள். தொடர்பு கொள்ள முடியவில்லை. நெருக்கடியான வேளைகளில் தொலைத்தொடர்பும் சதி செய்வது கண்டு மனம் வருந்தினாள். வல்ல அல்லாஹ்விடம் பிராத்தனை செய்வது தவிர வேறு வழியில்லை என நினைத்து அனைவரும் இறைவனைப் பிராத்தனை செய்தனர்.

மதிய வேளை அமினாவின் உம்மாவிடமிருந்து அழைப்பு வந்தது. மகள் அமினா மகிழ்ந்துபோனாள். ஆனால் உம்மாவோ, குரல் தழுதழுக்க மகளை அழைத்து, மவ. எங்க இருக்கீங்க. இங்க எல்லாம் அழிஞ்சு போச்சு. வீட்டில தண்ணி வருதென்று சொல்லி இரவு எங்களை எல்லாம் அழைச்சிட்டுப் போய் ஒரு எடத்தில தங்க வச்சாங்க. அங்கதான் இப்ப இருக்கம். எங்களுக்கு ஒண்ணும் ஆகல. அல்லாட கருணையால தப்பிச்சிட்டோம். வீடு முழுக்க சேறும் சகதியுமாப் போச்சாம். வீட்டிலிருந்த சாமான் எல்லாம் நாசமாப் போச்சாம். வீட்டுக்குப் போவ ஏலா. இங்க பாதுகாப்பு படையும் வெளியிலிருந்து வந்த ஆக்களும் வீடு காணிகளைச் சுத்தம் பண்ணுறாங்க. உங்க வாப்பாவும் அங்கதான் நிண்டு வேலை செய்றாங்க. நீங்க இப்ப வர வேணா. இருக்கிற இடத்திலேயே கவனமா இருங்க. நம்மட ஜெஸா ஆக்கள் இருந்த வீடெல்லாம் மண்ணுக்குள்ளே புதைஞ்சு போச்செண்டு கதைக்கிறாங்க. அவள்ட உம்மா வாப்பாவுக்கு என்ன நடந்தது என்று தெரியாது. அல்லாதான் காப்பத்த வேணும் எனக் கூறி அழத் தொடங்கினார், அமினாவின் உம்மா.

“உம்மா நீங்க கவலைப்படாதீங்க. பாதுகாப்பா இருங்க. இன்று எங்களை ஊருக்கு கூட்டி வாரதா பள்ளிவாசல் ஆட்கள் சொல்லிட்டுப் போறாங்க. வெளிக்கிட்டதும் நான் கோல் எடுத்துச் சொல்றேன்.” எனக் கூறிவிட்டு ஜெஸாவை நோக்கி வந்தாள் அமினா.

ஜெஸாவும் ஏனைய இரு தோழிகளும் தங்களது வீடுகளுக்குத் தொடர்பை ஏற்படுத்த முயற்சித்துக் கொண்டிருந்தார்கள். ஜெஸாவைத் தவிர ஏனைய இருவருக்கும் உம்மா வாப்பாவுடன் கதைப்பதற்கு லைன் கிடைத்துவிட்டதும் அவர்களுடன் உரையாடி ஆறுதல் அடைந்தார்கள். ஆனால் ஜெஸாவுக்கு மட்டும் முடியவில்லை. ஜெஸா மிகவும் பதட்டப்பட்டவளாகவும் பயந்தவளாகவும் காணப்பட்டாள்.

ஜெஸாவின் றம்புக் எல கிராமம் மண்ணோடு மண்ணாகப் போய்விட்ட சேதியை ஜெஸாவிடம் கூற முடியாது தவித்தாள் அமினா. நல்ல வேளை சமூக வலைத்தளங்கள் அவர்கள் இருந்த இடத்தில் வேலை செய்யவில்லை. அதுவும் ஒரு வகையில் நன்மையாப் போய்விட்டது.

கண்டி பெரிய பள்ளிவாசல் நிருவாகிகளால் வேன் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு இரண்டு தாய்மார்மகளுடன் ஒரு முதியவரும் அடங்கலாக கம்பளை நோக்கிப் பயணமாவதற்காக ஆயத்தமானார்கள்.

“யா அல்லாஹ். எங்களது ஊர்ப்பகுதிக்கு எதுவுமே நடந்து விடக்கூடாது. எனது உம்மா, வாப்பா, தம்பிமார்களை உயிர்களுக்கு ஆபத்தில்லாமல் காப்பாத்திவிட்டாய். வீடு, வாசல், பொருட்கள் போனாலும் பரவாயில்லை. நீ நாடினால் அவற்றை மீண்டும் பெற்றுக்கொள்ளலாம். ஜெஸாவின் நிலைதான் மிகக் கவலையாக இருக்கு. அவள்ட குடும்பத்துக்கு என்ன நடந்தது என்று தெரியல்ல. அவள்ட குடும்பத்தக் காப்பாத்து அல்லாஹ். ஜெஸாட முகத்தைக் கூடப் பார்க்க முடியல்ல. அவ்வளது சோகமா இருக்கா. வல்ல ரஹ்மானே எங்க எல்லோரையும் காப்பாத்து. எனக் கண்ணீர் விட்டு அழுதாள் அமினா.

ம்... எல்லாரும் ஏறுங்க என றைவர் கூறியதும் தன் உம்மா, வாப்பா, தம்பி, தங்கை, வீடு வாசல் அனைத்தும் தான் பிறந்து வளர்ந்து வசித்த மண்ணுக்குள்ளேயே புதையுண்ட செய்தி அறியாது தனது வலது காலை முன்வைத்து உள்ளே ஏறி அமர்ந்தாள், ஜெஸா.

 எஸ்.ஏ. கப்பார்.

25.12.25

தன் வினை

 24. தன் வினை

ஏழு வயதில் ஒன்று. ஐந்து வயதில் ஒன்று. இரண்டும் பெண் பிள்ளைகள். திருமணம் முடித்துப் பத்து வருடங்கள் கடந்து விட்டன. பிள்ளைகளுக்குப் புத்தி தெரிந்த பிறகாவது தனது முன்கோபத்தைத் தணிக்க முடியாது தினமும் வேதனைப்பட்டான், முகைமின்.

முகைமின் நல்ல வாட்டசாட்டமான அழகானவன். பல்கலைக்கழகப் பட்டதாரி. தற்போது வேலை செய்யும் நிறுவனம் அவனது மூன்றாவது தொழில் புரியும் இடம். முதலில் பட்டதாரி ஆசிரியராகக் கடமை புரிந்து படிப்பித்த பாடசாலை அதிபருடன் வாக்குவாதப்பட்டு ஆத்திரத்தில் தொழிலைத் தூக்கியெறிந்து விட்டு ஐந்தாறு மாதங்கள் தொழில் எதுவும் செய்யாமல் வீட்டிலேயே இருந்தான்.

மனைவி ஜெஸிலாவும் உயர்தரம் வரை படித்துவிட்டு தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்தாள். ஜெஸிலா அமைதியான அடக்கமான அழகானவள். நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவள். அவளது அப்பாவும் ஒரு பட்டதாரி ஆசிரியர். தலைநகரிலுள்ள பிரபல்யமான கல்லூரி ஒன்றில் ஆங்கில ஆசிரியராகக் கடமையாற்றியவர். அம்மா நல்லதொரு குடும்பத்தில் பிறந்து வளர்ந்த பண்பான பெண். படித்தவர். தொழில் எதுவும் புரியவில்லை.

ஒரேயொரு பிள்ளையை நல்லதொரு ஆடவனுக்குத் திருமணம் முடித்துவைக்க வேண்டுமென்ற எண்ணத்தில் நன்கு விசாரித்து முகைமினை மணமுடிந்து வைத்தனர். ஜெஸிலாவின் பெற்றோர் உயிருடன் இருக்கும் வரை ஒரே வீட்டில் ஒன்றாகவே மகள் மருமகனுடன் வாழ்ந்து வந்தனர். ஜெஸிலாவுக்கு இரண்டாவது மகள் பிறந்து எட்டு மாதங்களுக்குள் பெற்றோர்கள் இருவரும் மூன்று மாத கால இடைவெளியில் இயற்கை எய்திவிட்டார்கள். மிகவும் மனம் நொந்து போன ஜெஸிலா பிள்ளைகளைப் பராமரிக்க வேறு வழிகளில்லாது தான் பார்த்து வந்த வேலையை விட்டுவிட்டு தனது பிள்ளைகளையும் கணவனையும் நன்கு கவனித்துவந்தாள்.

ஒரு நாள் அலுவலகத்திலிருந்து நேரத்தோடு வீடு வந்த முகைமின் மிகவும் கோபத்தோடு காணப்பட்டான்.

'என்னங்க. ஒப்பிஸில ஏதாவது பிரச்சினையா? உங்கட முகத்தைப் பார்க்கவே எனக்குப் பயமா இருக்கு. என்ன நடந்தது?' எனப் பக்குவமாய்க் கேட்டாள், ஜெஸிலா.

'இனி நான் அந்தக் கம்பனிக்கு வேலைக்குப் போவதாய் இல்லை. மரியாதை தெரியாத மனேஜர்மார்கிட்ட வேலை செய்ய முடியாது. அதனால் அவன்ட முகத்திலேயே எல்லாத்தையும் வீசி எறிந்துவிட்டு வந்திட்டேன். இனிப் போறதா இல்லை' - எரிந்து தள்ளினான் முகைமின்.

'இஞ்சப் பாருங்க. எனக்கும் தொழிலுக்குப் போக முடியாத நிலை. நம்ம பிள்ளைகளின் எதிர்காலத்தையும் பார்க்கவேண்டும். அடிக்கடி சண்டை பிடித்துக்கொண்டு வேலையை விட்டிட்டு வாரது அவ்வளவு நல்லாயில்லை. நல்லா யோசிச்சுப் பாருங்க. இன்னொரு வேலை எடுப்பது எவ்வளவு சிரமம் என்று. உங்களுக்கே நல்லாத் தெரியும். வாழ்க்கைச் செலவு மலைபோல ஏறியிருக்கிற இந்தக் காலத்திலே வேலையில்லாம எப்படி காலத்தைக் கடத்துற' - யாராவது முகைமினுக்குப் புத்தி சொன்னால் அது அவனுக்குப் பிடிக்காது என்பது அவளுக்கு நன்கு தெரிந்தும் வேறு வழியின்றி ஒரே மூச்சில் கூறிவிட்டு, கணவனுக்குக் கோப்பி போட்டு எடுத்து வர உள்ளே சென்றாள்.

கோப்பி தயாரித்துக்கொண்டு வந்த ஜெஸிலா கணவன் இன்னும் அமராது நின்றுகொண்டே யோசித்துக் கொண்டிருப்பதைக் கண்டு சிறிது கலங்கினாள். 'இந்தாங்க கோப்பி' என்றவாறு கோப்பிக் கோப்பையைத் தன் கணவனிடம் நீட்டினாள். தன் கையை நீட்டி கோப்பிக் கோப்பையை வாங்கிய முகைமின் சற்றும் எதிர்பாராத விதமாக அதை ஜெஸிலாவின் முகத்தை நோக்கி வேகமாக வீசினான்.

நல்ல சூடாக இருந்த கோப்பி முகத்திற் பட்டதும் துடியாய்த் துடித்து வீறிட்டு அலறினாள், ஜெஸிலா. தாயின் அலறலைக் கேட்டு இரு பெண் பிள்ளைகளும் கத்திக் கொண்டு தாயை நோக்கி ஓடி வந்தனர். பிள்ளைகள் வீட்டில் இருப்பதை உணராமல் தான் செய்த செயலை எண்ணி முகைமின் மிகவும் கவலைப்பட்டான். தனது முன்கோபத்தை தன்னால் அடக்க முடியாமல் இருப்பதை எண்ணி மனம் வருந்தினான்.

பெண் பிள்ளைகள் இரண்டும் அழத்தொடங்கின. ஒருவாறு நிலைமையைச் சமாளித்துக்கொண்டு உடனே ஜெஸிலாவையும் பிள்ளைகளையும் தனது காரில் ஏற்றிக்கொண்டு பக்கத்து அரச வைத்தியசாலைக்கு விரைந்தான். மனைவி பிள்ளைகளை வெளியே அமரச் சொல்லிவிட்டு வைத்தியரைக் காண உள்ளே சென்ற முகைமின் சிறிது நேரத்தில் வெளியே வந்து உள்ளே வருமாறு சைகை செய்தான். தன் பிள்ளைகளிடம் கவனமாக இருக்குமாறு கூறிவிட்டு கணவன் நின்ற திசையை நோக்கி நடந்து சென்றாள், ஜெஸிலா. ஒரு நேர்ஸ் ஜெஸிலாவை நோக்கி வந்து கண் வைத்தியர் இருக்கும் அறைக்கு அழைத்துச் சென்றாள்.

'இருங்க மேடம். கவலைப்படாதீங்க. என்ன நடந்தது என்று எங்களால் யூகிக்க முடிகிறது. இதே போல எத்தனையோ கேஸ்களைப் பார்த்திருக்கோம். என்ன செய்வது விதிப்படித்தான் எல்லாம் நடக்கும். உங்க கணவருடன் கதைத்ததிலிருந்து அவரொரு முன்கோபக்காரர் தவிர கெட்டவரல்ல என்பது புரிகிறது. உங்கள் மீதும் பிள்ளைகள் மீதும் அதீத பாசம் வைத்திருப்பவர் போல்தான் தெரிகிறது. ஏதோ நடந்தது நடந்துவிட்டது. அதை முதலில் விட்டு விடுங்க.' எனக் கூறிவிட்டு ஜெஸிலாவின் இரு கண்களையும் பரிசோதித்தார். சிறிது நேரம் அமைதியாக இருந்த வைத்தியர் 'உங்கட வலது கண் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதால் சிறியதொரு சத்திர சிகிச்சை செய்யவேண்டி வரும். இடது கண்ணில் எவ்வித பிரச்சினையும் இல்லை. ஆனால் இடது கண்ணும் சரியாகத் தெரியவில்லை என்று நீங்கள் சொல்வதுதான் எனக்கு வியப்பாக இருக்கு. அதைப் பிறகு பார்ப்போம். முதலில் வலது கண்ணை சத்திர சிகிச்சை செய்ய வேண்டும். இல்லையேல் நிரந்தரமாகப் பார்வை போய்விடும். உங்க கணவரிடமும் கொஞ்சம் பேச வேண்டும். நீங்க சிறிது நேரம் வெளியே இருங்க' என கண் வைத்தியர் கூறியதை நன்கு அவதானித்துக் கேட்டுக் கொண்டிருந்த ஜெஸிலாவின் கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக வடிந்தது.

சத்திர சிகிச்சைக்கான நாளும் வந்தது. இறைவன் உதவியால் நல்லபடி சத்திர சிகிச்சையும் முடிவடைந்தது.

'நல்லபடி ஆபரேஷன் முடிவடைந்து விட்டது. ஒரு வாரத்துக்கு ஒரு முறை கிளினிக் வந்து போனால் போதும். பழையபடி பார்வை திரும்ப ஓரிரு வாரங்கள் செல்லும். மருந்து மாத்திரைகளை தவறாது நேரத்திற்கு உட்கொள்ளவும். வாழ்த்துகள். வீட்டுக்குச் சென்று சந்தோஷமாக இருங்கள்.' என்று கணவன் மனைவி இருவரையும் பார்த்துக் கூறிவிட்டு நகர்ந்து சென்றார், சிகிச்சை மேற்கொண்ட வைத்தியர்.

இந்த இரு வாரங்களும் முகைமின் மற்றும் பிள்ளைகள் இருவரும் ஜெஸிலாவுடன் தனியார் வைத்தியசாலையில்தான் பணம் செலுத்தித் தங்கியிருந்தார்கள்.

வீடு வந்து சேர்ந்தபின் கணவன் மனைவி இருவரிடமும் ஏற்கனவே இருந்த பரஸ்பர புரிந்துணர்வும் அன்பும் படிப்படியாகக் குறையத் தொடங்கின. முகைமின் மீண்டும் தான் வேலை செய்த கம்பனிக்கே வேலைக்குச் சென்றுவந்தான்.  பிள்ளைகள் வழமை போல் பாடசாலை சென்று வந்தனர். குற்ற உணர்வு முகைமினை ஆட்டிப்படைக்கத் தொடங்கியதில் வியப்பொன்றுமில்லை.

பதினைந்து வருடங்கள் ஓடி மறைந்தன. ஆனாலும் நடந்த சம்பவத்தை மறக்கமுடியாது கவலைப்பட்டுக்கொண்டே வாழ்ந்தாள் ஜெஸிலா. ஜெஸிலாவின் நடத்தைகளில் என்றுமே காணாத பல மாற்றங்கள் தென்படத் தொடங்கின. அவளது கண் பார்வை பழையபடி சரியாகிவிட்டதா அல்லது அதன் பாதிப்புகள் இன்னும் அவளைப் பாதித்துக் கொண்டிருக்கின்றனவா என அறிய முடியாது தவித்தான், முகைமின். நாள்கள் செல்லச்செல்ல ஜெஸிலாவின் கண் பார்வை சீராக இல்லை போல் தோன்றுவதாக எண்ணி தினமும் மிகக் கவலைப்பட்டான், முகைமின்.

'ஜெஸிலா, எனக்கு என்னவோ சந்தேகமாக இருக்கு ஜெஸிலா. உனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லைதானே? வேண்டுமென்றால் கண் வைத்தியரிடம் சென்று காட்டி சிகிச்சை பெறலாம். நானும் பல நாட்களாக அவதானித்து வருகிறேன். உண்மையைச் சொல் ஜெஸிலா' என வருத்தப்பட்டான், முகைமின்.

'ஒன்றுமில்லைங்க. எனக்கு முழுசாக் கண் பார்வை இல்லாட்டிக்கூட வருத்தப்படமாட்டேன். என்ட பிள்ளைகளின் திருமணத்தை முடிக்கும் வரை எனக்கு ஓரளவு பார்வை இருந்தாப் போதும். அதைத்தான் இறைவனிடம் அனுதினம் வேண்டுகிறேன்.' என்ற ஜெஸிலாவின் கண்கள் பனித்தன.

தன் மனைவியிடமிருந்து இப்படியொரு பதிலை எதிர்பாராத முகைமின் அதிர்ந்துபோனான். தனது முன்கோபத்தால் ஏற்பட்ட விளைவு ஜெஸிலாவை எவ்வளவு தூரம் பாதித்திருக்கிறது என்பதை உணர்ந்து மிகவும் வேதனைப்பட்டான்.

நாள்கள் செல்லச் செல்ல ஜெஸிலா 'கண் பார்வை நன்றாகத் தெரியாத ஒருவளாக' மாறி தனது கணவன் முன் நடிக்கத் தொடங்கினாள். தன் கணவனைத் திருத்தியெடுக்கவும் தன் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சிறப்புற அமைக்கவும் இதைத் தவிர வேறு வழி அவளுக்குத் தெரியவில்லை.

பிள்ளைகள் இருவரும் வளர்ந்து பருவ வயதை அடைந்துவிட்டார்கள். இருவரும் பல்கலைக்கழகப் பட்டப்படிப்பை முடித்து திருமணமும் செய்துகொண்டு தங்கள் கணவன்மார்களுடன் வெளிநாடு சென்று சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தற்போது வீட்டிலிருப்பது முகைமினும் ஜெஸிலாவும் மட்டுமே. கணவன் வேலைக்குச் சென்ற பின் ஜெஸிலா வீட்டில் தனியாக இருந்து பழக்கப்பட்டுவிட்டாள்.

காலம் தன் கடமைகளைச் சரிவரச் செய்துகொண்டு வரும் அதே வேளை ஜெஸிலாவுக்குத் தன் கணவருடனான அன்பும் பாசமும் குறைவடைந்து இருவருக்குமிடையேயான உறவு விரிவடைந்துகொண்டே வந்தது. இருந்தும் நடந்தவற்றை மறக்க முயற்சித்து இயலாதபோதும் ஜெஸிலா தன் கணவரை நன்றாகவே கவனித்துவந்தாள். இப்போதெல்லாம் முகைமின் அதிகம் கதைப்பதுமில்லை. கோபப்படுவதும் இல்லை.

ஒரு வெள்ளிக்கிழமை காலை தன் நாளாந்த வீட்டு வேலைகளைச் செய்துகொண்டிருந்த ஜெஸிலா தொலைபேசி அழைப்புமணி கேட்டதும் எழுந்துசென்று றிஸீவரைக் கையிலெடுத்து  'ஹலோ' என்றாள்.

'நாங்க உங்க கணவன் முகைமின் வேலை செய்யும் அலுவலகத்திலிருந்து கதைக்கிறம், மேடம். ஒரு பேட் நியூஸ். முகைமின் வேலை செய்துகொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக நடந்த விபத்தில் காயப்பட்டு அவரை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்கிறோம். உடனடியாக கொழும்பு கண் ஆஸ்பத்திரிக்கு வாங்க.' - அழைப்பு சில வினாடிகளில் துண்டிக்கப்பட்டது.

எந்தவித பதட்டமும் இல்லாமல் ஒரு ஆட்டோ பிடித்து அவசர அவசரமாக ஆஸ்பத்திரி நோக்கிச் சென்றாள், ஜெஸிலா.

'வாங்க, மேடம். கவலைப்படாதீங்க. என்னை ஞாபகம் இருக்கா? உங்களுக்கு கண் ஆபரேஷன் செய்தவன்தான். உங்கட கணவன்ட இரு கண்களிலும் அஸிட் பட்டு மிக மோசமாப் பாதிக்கப்பட்டிருக்கு. கண் பார்வை மீண்டும் திரும்பி வர சான்ஸே இல்ல.' - சர்வ சாதாரணமாகக் கூறிய வைத்தியரைப் பார்த்து ஆச்சரியப்பட்டாள் ஜெஸிலா.

'நான் கடந்த நாற்பது வருடங்களாக கண் வைத்தியராக் கடமைபுரிகிறேன். வெற்றுக் கண்களைப் பார்த்தாலே எனக்குப் புரிந்துவிடும். இவ்வளவு காலமும் பூரணமாகக் கண் தெரியாதது போல் நீங்க நடித்து வருவதும் எனக்குத் தெரியும். அடிக்கடி உங்க கணவன் என்னிடம் வந்து உங்க நடவடிக்கைகளைப் பற்றிக் கூறி ஆலோசனை கேட்பார். நானும் 'கவலைப்படாதீங்க. விரைவில் சரியாகிவிடும்' என்று கூறி அனுப்பி வைப்பேன். இப்ப நீங்க நிரந்தரமாகவே உங்கள் கண்களைத் திறந்து பார்க்கலாம். இனியும் நடிக்கத் தேவையில்லை. கோட் பிளஸ் யு (God bless you).

வைத்தியர் கூறியதைக் கேட்ட ஜெஸிலா விக்கித்து விறைத்து அப்படியே அசைவற்று நின்றாள்.

எஸ். ஏ. கப்பார்.